இது ஆராதனை நேரம்
துதி பாடி மகிழும் நேரம்
திரியேக தேவனுக்கு
புகழ்மாலை சூட்டும் நேரம்
1. தேவ சமூகம் மூடும் நேரம்
தேவ அன்பால் நிரம்பும் நேரம்
பாதப்படியில் அமரும் நேரம்
இன்ப சத்தம் கேட்கும் நேரம்
2. கண்ணீர் கவலை மறக்கும் நேரம்
சமாதானத்தால் நிறையும் நேரம்
இன்ப ஆலோசனை அடையும் நேரம்
சுயம் பறந்திடும் ஜெய நேரம்
3. வாக்குத்தத்தங்கள் நினைக்கும் நேரம்
நிறைவேற படைக்கும் நேரம்
சித்தம் செய்ய அர்ப்பணிக்கும் நேரம்
தத்தம் செய்து ஆர்ப்பரிக்கும் நேரம்
4. அபிஷேகத்தால் ததும்பும் நேரம்
புது கிருபைகள் பெரும் நேரம்
அனலாக்கப்படும் மகிமையின் நேரம்
தரிசனங்கள் காணும் நேரம்
5. வெற்றி கோஷத்தால் முழங்கும் நேரம்
தோற்ற சாத்தானை துரத்தும் நேரம்
நேசர் மார்பில் சாய்ந்து மகிழும் நேரம்
முகம் பார்த்திட ஏங்கும் நேரம்