இயேசுவுக்கு நான் செல்லப்பிள்ளை அவர்
அன்பிற்கோ ஈடு இணை இல்லை
அவர் என்னிலே பிரியமாகினார் – தன்
சித்தம் போல வழி நடத்தினார்
1. தாய் தன் மகனை ஒரு நாள் மறந்து போகலாம்
தந்தை கூட ஒரு நாளில் வெறுத்து ஒதுக்கலாம்
நாள்தோறும் என் மீது கண் வைத்தார்
நித்தமும் உன்னைக் காப்பேன்
நீ என் செல்லப்பிள்ளை என்றார்
2. மகனே! மகளே! உன் வழிகள்
உன் வழிகளல்ல மறவாய் உன்
நினைவுகள் என் நினைவுகளல்ல
என் இயேசு என்னோடு தினம் பேசும் எந்நாளும்
எந்தன் உள்ளம் தங்கும் எந்தன் நேசராம்