கர்த்தர் எந்தன் மேய்ப்பர்
நான் தாழ்ச்சி அடைவதில்லை
அவர் கோலும் தடியும் என்னை
என்றும் தேற்றி நடத்திடும்
என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து
என் தேவைகள் யாவையும் சந்தித்தார்
என்னை அமர்ந்த தண்ணீரண்டை நடத்தி
எனக்கு சமாதான வாழ்வை அளித்தார்
என் ஆத்துமாவை அவர் தேற்றி
என்னை அனுதினம் போஷித்து நடத்தினார்
அவரின் நாம மகிமையினிமித்தம்
நீதியின் பாதையில் நடத்துகின்றார்
நான் மரணப் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
அவர் என்னோடு கூடவே இருக்கிறார்
என்னை அபிஷேகத்தால் தினம் நிறைத்து
பாத்திரம் நிரம்பியே வழியச் செய்தார்
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
அவர் கிருபையும் நன்மையும் தொடர்ந்திடும்
நான் கர்த்தரின் வீட்டிலே என்றும்
நீடித்த நாட்களாய் நிலைத்து இருப்பேன்