நான் நானாகவே வந்திருக்கிறேன்
உம் பிரசன்னத்தில் வந்திருக்கிறேன்
நீர் இன்று என்னை ஏற்றுக்கொள்வீரா
உம் ராஜ்யத்தில் சேர்த்துக் கொள்வீரா
யோசேப்பைப் போல் நான் ஒழுங்கில்லையே
நோவாவை போல் நீதிமானும் இல்லையே
ஆபிரகாமைப் போல் விசுவாசி இல்லையே
தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே
நான் நானாக தானாக வந்திருக்கிறேன்
மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையே
மரியாளைப் போல் உம்மை நேசிக்கலையே
எஸ்தரைப் போல எதையும் செய்யவில்லையே
எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே
நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன்