நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே – 2
தோல்வி எனக்கில்லையே – நான்
தோற்றுபோவதில்லையே – 2
மலைகளைத் தாண்டிடுவேன் – கடும்
பள்ளங்களைக் கடந்திடுவேன் – 2
சதிகளை முறியடிப்பேன்
சாத்தானை ஜெயித்திடுவென் – 2
ஹாலேலூயா 8 (நீh என்னோடு)
சிறைச்சாலைக் கதவுகளும் – என்
துதியினால் உடைந்திடுமே – 2
அபிஷேகம் எனக்குள்ளே – நான்
ஆடிப்பாடி மகிழ்ந்திடுவேன் – 2
மரணமே கூர் எங்கே
பாதாளமே ஜெயம் எங்கே2
கிறிஸ்து எனக்கு ஜீவன்
சாவெனக்கு ஆதாயமே