நன்றி சொல்லி பாடுவேன்
நாதன் இயேசுவின் நாமத்தையே
நன்றியால் என் உள்ளம் நிறைந்தே
நாதன் இயேசுவை போற்றிடுவேன்
நல்லவரே வல்லவரே
நன்மைகள் என் வாழ்வில் செய்பவரே
கடந்த நாட்கள் முழுவதும் என்னை
கண்ணின் மணிபோல் காத்தாரே
கரத்தைப் பிடித்து கைவிடாமல்
கனிவாய் என்னை நடத்தினாரே
எரிகோ போன்ற எதிர்ப்புகள் எனக்கு
எதிராய் வந்து எழும்பினாலும்
சேனையின் கர்த்தர் என்முன்னே
செல்கின்றார் என்றும் பயப்படேனே
துன்பங்கள் எந்தன் வாழ்வினிலே
சுழ்ந்து என்னை நெருங்கினாலும்
கன்மலை தேவன் என்னுடன் இருக்க
கலக்கமில்லை என் வாழ்விலே
மேகங்கள் மீது மன்னவன் இயேசு
வேகம் வருவார் ஆனந்தமே
கண்ணீர் துடைத்து பலனை கொடுக்க
கர்த்தாதி கர்த்தர் வருகின்றாரே