போஷிப்பவர் நீரே
பாதுகாப்பு நீரே
பரிகாரி நீரே
என் இரட்சகரும் நீரே
சோர்ந்துபோனாயோ
கவலைப்படாதே – 2
இயேசு உன்னை சுமப்பார்
மகிழ்ச்சியாக்குவார்-2
இயேசு நீர் பெரியவர்
எல்ஷடாய் நீர் வல்லவர் – 2
உலகம் வனாந்திரம்
பரலோகம் மகிழ்ச்சியே
தண்ணீர் மேல் நடந்தார்
அற்புதங்கள் செய்திட்டார்
உன் பிரச்சினை எம்மாத்திரம்
எண்ணிப்பார் ஓர் நிமிடம் – 2
அல்லேலூயா பாடுவோம்
தேவனை துதிப்போம்