சோர்ந்து போகாதே என் நண்பனே
மனம் உடைந்து போகாதே என் பிரியனே
கடும் புயல் வரினும் காற்று வீசினும்
கலங்காதே மனமே
இயேசு உன்னைத் தேற்றிடுவார்
இயேசு உன்னைக் காத்திடுவார்
இயேசு உன்னை உயர்த்துவார் நண்பனே
என் ஆத்ம நேசர் முன்செல்கையில்
நான் என்றுமே அஞ்சிடேன்
என் கரம் பிடித்து மகிமைதனில் – என்னை
தினமும் நடத்துவாh
நண்பர் உன்னைக் கைவிட்டாலும்
நம்பினோர் உன்னைத் தள்ளிவிட்டாலும்
நீ கலங்காதே திகையாதே
உன் இயேசு இருக்கிறார்