தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பா
விழித்திருந்து ஜெபிக்கும்
வரம் தாங்கப்பா
நான் தூங்கினால் எதிரிகளை விதைப்பான்
ஜெபம் மறந்தால் எதிரி ஜெயம் எடுப்பான்
உடலை ஒடுக்கணும்
உணவைக் குறைக்கணும்
பேச்சை நிறுத்தணும்
பெலத்தில் வளரணும்
அன்னாளைப் போல
கண்ணீரை வடிக்கணும்
எழுப்புதல் காணும் வரை
இதயத்தை ஊற்றணும்
தானியேல் போல
துதிக்கணும் ஜெபிக்கணும்
சிங்கங்களின் வாய்களை
தினம் தினம் கட்டணும்
பவுலைப் போல
சிறையிலே ஜெபிக்கணும்
கதவுகள் திறக்கணும்
கட்டுகள் நீங்கணும்