என் வாழ்க்கையெல்லாம் உம் பிரசன்னத்திலே
எந்நாளும் கடந்திட வேண்டும் – 2
உந்தன் பிரசன்னம் எத்தனை இன்பம்
உந்தன் சமூகம் எத்தனை இன்பம் – 2
என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு நீர்-2
எந்நாளும் எதற்காகவும் இழந்திடமாட்டேன்
உம்மை – 2 என் வாழ்க்கை
உலகம் என்னை திருப்திபடுத்த முடியாதைய்யா
எந்தன் ஊற்று உம்மிடத்தில் உள்ளதே ஐயா
இரவும் பகலும் உமது சமூகம் விழுந்து கிடக்கணும்
இடைவிடாமல் உம்மோடு என் தொடர்பு இருக்கணும்
சிறையினிலே யோசேப்போடு இருந்த தெய்வமே
சிறுமையிலும் வறுமையிலும் எங்கள் மகிமையே
வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விட
உம்மிடத்தில் நான் வாழும் நாட்கள் இன்பமே