கிருபையே கிருபையே ஒப்பில்லா கிருபையே
கிருபையே கிருபையே அதிசய கிருபையே
உங்க கிருபை தான் என்னை தாங்குது
உங்க கிருபை தான் என்னை நடத்துது
பெலவீன நேரத்திலே பெலப்படுத்துமே
சோர்வான வேளையிலெ உற்சாக மூட்டுமே
முடமான கால்களை உறுதிப்படுத்துமே
தளர்ந்த கைகளை திடப்படுத்துமே
தகுதியில்லா இடங்களில் தகுதிப்படுத்துமே
களைப்பான காலத்தில் உந்தித் தள்ளுமே
முடியாத வேளையில் நிறைவேறுமே
குறைவாக இருக்கும் போது நிறைவாகுமே