கர்த்தரை கெம்பீரமாய் துதியுங்கள்
கர்த்தரை கெம்பீரமாய் துதியுங்கள்
அவர் கிருபை என்றும் உள்ளது (2)
கர்த்தரே உன்னதர் மகிமையில் சிறந்தவர்
ஆனந்த கீதங்கள் பாடுவோமே
சூரிய சந்திரனே துதியுங்கள்
அவர் கிருபை என்றும் உள்ளது (2)
கண்ணீரைத் துடைப்பவர், கைவிடாதிருப்பவர்
நன்றியால் கர்த்தரை உயர்த்திடுவோம்.
வானாதி வானங்களே துதியுங்கள்
அவர் கிருபை என்றும் உள்ளது (2)
அதிசயமானவர் அற்புதங்கள் செய்பவர்
புகழ்ந்து யாவரும் போற்றிடுவோம்
பூமியின் குடிகளே துதியுங்கள்
அவர் கிருபை என்றும் உள்ளது (2)
சுவாசமுள்ள யாவுமே கர்த்தரை துதிக்குமே
ஆகையால் பாடுவோம் அல்லேலூயா