ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
நேசரை நோக்கிடுவாய்
உன் பாதம் கல்லில் இடறாதபடி
தூதர்கள் ஏந்திடுவார் – (2)
1. வனாந்திரத்தில் மன்னா தந்தார்
மறைவாக காத்து வந்தார் – (2)
இருள் நீக்கி வெளிச்சம் தந்தார்
நாளெல்லாம் நிழலானார் – (2)
2. அலை அலையாய் பகைவர்களும்
எழும்பியே வந்தாலும் – (2)
அதிகாரங்கள் உடையவர்தான்
ஆண்டவர் நடத்தினாரே – (2)
3. நன்மையினால் உன் வாழ்வை
இதுவரை நடத்தினாரேஆத்துமாவே – (2)
ஏன் கலங்குகிறாய்
இயேசுவில் நிலைத்திடுவாய் – (2)