ஆயிரம் பேரில் சிறந்தவர் – என் இயேசு ராஜன்
அழகில் முற்றும் சிறந்தவர் – இவர் எந்தன் நேசர்
என்னோடு என்றும் வாழ்பவர்
என் நேசர் என் நண்பர் எந்நாளும் எனைக்காப்பார்
தோளின் மேல் சுமந்திடுவார்
1. கண் துயிலும் நேரம் எனைத்தேடி ஓடி வந்தாரே
கைவிரலை கதவில் விட்டாரே
உன் நேசம் இன்பம் அது மதுரம் என்று சொன்னாரே
என் பிரியம் என்றுரைத்தாரே
வெள்ளைப் போளம் வாசம் வீசிடவே
தூபஸ்தம்பம் போல வருகிறார்
உள்ளம் துள்ளிப்பாடும் மகிழ்ந்தாடும்
என்னில் எப்போதும்
2. கன்மலையின் ஓரம் தங்கும் புறாவே என் உத்தமியே
கண்களால் என்னை வென்றாயே
துதி மலர் தொடுப்பேன் மாலையிடுவேன் என் மன்னனுக்கே
புதுப்பாடல் பாடிடுவேனே
கோடியுகம் கூட வாழ்ந்திடுவேன்
என் தாகம் நீரே
உம்மைப்பாட வரம் தந்தருளும்
3. கர்த்தர் அன்பை பாட புகழ் சூட நாவு போதாதே
ஈடு இணை ஏதும் இல்லையே
மாந்தர் மனம் மகிழ துயர் அகல துணை வந்தாரே
தரணியில் காத்திடுவாரே
ஆவியினால் களி கூர்ந்திடுவேன்
நீதியினால் என்றும் வாழ்ந்திடுவேன்
என் நேசர் வருவார் என்னை அணைப்பார்
நான் என்ன சொல்வேன்!