ஆராதனை இந்த வேளை
ஆண்டவரை தொழும் காலை
துதியுடனே ஸ்தோத்தரிப்போம்
தூயவரை தொழுதிடுவோம்
1. ஆவியுடன் நல் உண்மையுடன்
ஆராதிப்போம் அவர் நாமத்தை
கூடிடுவோம் பணிந்திடுவோம்
கல்வாரி அன்பினை பாடிடுவோம்
2. திருரத்தத்தால் மீட்பர் சம்பாதித்த
திருச்சபையில் தினம் சூடிடவே
தவறாமல் வேதம் தினம் ருசி பார்த்திட
திருப்பாதம் சேர்ந்து ஜெபித்திடுவோம்
3. மெய் சமாதானம் கிருபையுடன்
மாறாத மீட்பர் மகிமையுடன்
மாசற்ற பேரின்பம் அன்பினிலே
மறுரூபம் அடைந்தே பறந்திடுவோம்