ஆராதிப்போம் ஆண்டவரை
ஆவியோடும் உண்மையோடும்
மாறாத ஆனந்தம் குன்றாத பேரின்பம்
இயேசுவில் என்றும் உண்டு – அல்லேலூயா
நேசரண்டை வாருங்கள்
நேசத்தை ருசியுங்கள்
ஆவலாய் அழைக்கிறார் இதோ
1. ஆகாமியக் கூடாரம் வேண்டாம்
ஆலய வாசற்படியிலே ஆனந்தம் பாடி
நேசரைத் தேடி ஆண்டவர்
பாதம் பணிவோம் – ஆராதிப்போம்
2. ஆலோசனைக் கர்த்தர்
அவரே ஆலோசனை தந்திடுவாரே
பாதையைக் காட்டி கரம்பிடித்து
நேர்வழி நடத்திடுவார் – ஆராதிப்போம்
3. ஆட்டுக்குட்டி திருஇரத்தமே
பாவமறக் கழுவிடுமே சாபங்கள்
போக்கி நோய் நீக்கி
விடுதலை தந்திடுமே – ஆராதிப்போம்