ஆவியின் மழையே பொழியும் நேரம்
என்ன பேரின்பம்
தூய தேவனின் சாயல் அடையும்
வேளை நெருங்கிடுதே – அல்லேலூயா
1. ஆதி அந்தம் இல்லாத தேவா
உம்மை போற்றுகிறோம்
முன் குறித்தீரே முத்திரையிட்டீரே
எந்தன் துணை நீரே நான் உந்தன் சொந்தம்
2. தூய ஆவி இறங்கிடும் வேளை
பாவம் விலகிடுமே
ஜீவிய பாதையில் சீராக செல்ல
நல் வழி நடத்திடுமே
விண் வாழ்வடைய
3. அன்பின் ஆவி அகத்தினில் பொழிய
சிந்தை மாறிடுமே
பகைகள் அகலும் பாசம வளரும்
நேசம் நிறைந்திடுமே
என் உள்ளம் பொங்கும்
4. ஜெபத்தின் ஆவி இறங்கிடும் வேளை
ஜீவியம் மாறிடுமே
உள்ளம் உடைந்து உருகி ஜெபிக்க
தந்தேன் எந்தனையே
உம் பாதம் வந்தேன்