ஜெபத்தை கேட்கும் எங்கள் அன்பு தெய்வமே
ஜெபிக்க வைக்கும் எங்கள் ஆவியானவரே
ஜெபமே ஜெயமே-2
ஜெபம் ஜெயம் ஜெபம் ஜெயம் ஜெபமே-நீ
ஜெபித்துவிட்டால் வந்துவிடும் ஜெயமே-2
தானியேல் போல ஜெபிக்க வேண்டும்
சிங்கங்கள் வாய்களை கட்ட வேண்டும்
எதிரி வந்தாலும் நிற்க வேண்டும்
எதிர்த்து நின்று ஜெயம் பெற வேண்டும்
தாவீதைப் போல ஜெபிக்க வேண்டும்
எல்லா காலத்திலும் துதிக்க வேண்டும்
மானைப்போல ஏங்க வேண்டும்
கண்ணீரின் பள்ளத்தாக்கை கடந்திட வேண்டும்
ஆவியாலே நிரம்ப வேண்டும்
அக்கினியாய் பற்றி எரிய வேண்டும்
அகிலமெங்கும் செல்ல வேண்டும்
ஆண்டவர் இயேசுவை சொல்ல வேண்டும்
இடைவிடாமல் ஜெபிக்க வேண்டும்
இயேசுவே உம்மை துதிக்க வேண்டும்
இருப்பதை பகிர்ந்து கொடுக்க வேண்டும்
இயேசுவைப் போல நேசிக்க வேண்டும்