ஒப்பிட முடியாத தெய்வமே
உயர்ந்த அடைக்கலமே – 2
நீரே என் தெய்வம்
நீரே என் சொந்தம்
நீரே என் பந்தம்
நீரே என் எல்லாம் – ஒப்பிட
உம்மைப் போல் வேறே தெய்வம் இல்லை
உயிரோடு எழுந்தவரே – 2 – நீரே
என் மேலே உம் பரிதாபங்கள்
என்னை காத்திடுதே – 2 – நீரே
மனம் மாற நீர் ஒரு மனுஷனல்ல
தேவனாய் இருக்கின்றீரே – 2 – நீரே
நித்திய விவாகத்திற்கென்று
நியமித்துக் கொண்டவரே – 2 – நீரே
அரசாள என்னை அழைத்தவரே
அன்பால் இழுத்தவரே – 2 – நீரே