ஈசாயின் அடிமரத்தின் இளந்தளிர் ஒன்று
ஈன லோகத்தை மீட்க பிறந்தது அன்ற
என்ன! என்ன! என்ன! நமக்கு ஆனந்தம்
இன்பம்! இன்பம்! இன்பம்! நமக்கு பேரின்பம்
1. குயில் கூட்டம் குஷியாகப் பாட்டுப்பாடுதே – பெரும்
மயில் கூட்டம் அகமகிழ்ந்து ஆட்டம் ஆடுதே
ஐந்தறிவு ஜீவனுக்கே அந்த சந்தோஷம் இந்த
ஆறறிவு மனிதனுக்கோ பரம சந்தோஷம்
2. பூவினங்கள் தென்றலோடு வாசம் வீசுதே பசும்
புல்லினங்கள் பாலனுக்கு மெத்தையாச்சுதே
பாவச் சிறையில் வாழும் மாந்தர் பாவம் போக்கினார்
அந்த பரமன் இயேசு இராஜனுக்கு என்ன கொடுப்போம்
நம் இதயத்திலே இயேசுவுக்கு இடமும் கொடுப்போம்