உந்தன் நாமம் மகிமை பெற
வேண்டும் கர்த்தாவே
உந்தன் அரசு விரைவில்
வர வேண்டும் கர்த்தாவே
ஜெபிகக்கிறோம் நாங்க்ள் துதிகக்கிறோம்
1. இந்தியா (அகிலமெல்லாம்)
இரட்சகரை(ஆண்டவரை)
அறிய வேண்டுமே
இருளில் உள்ளோர்
வெளிச்சத்தையே காண வேண்டுமே
2. சாத்தான் கோட்டை
தகர்ந்து விழ வேண்டுமே
சாபம் நீங்க
சமாதானம் வரணுமே
3. கண்ணீர் சிந்தி கதறி
நாங்கள் அழுகிறோம்
கரம் விரித்து உம்மை
நோக்கிப் பார்க்கிறோம்
4. சிலுவை இரத்தம்
தெளிக்கப்பட வேண்டுமே
ஜீவ நதி பெருகி
ஒட வேண்டுமே
5. ஜெபசேனை எங்கும்
எழும்ப வேண்டுமே
உபவாசகூட்டம்
பெருக வேண்டுமே