உம்மை பிரிந்து வாழமுடியுமா
உம் அன்பை
என்மேல் மனதுருகும் தெய்வமே இயேசப்பா
என்மேல் மனம் இரங்கும் தெய்வமே இயேசப்பா
1. வாலிப நாட்களில் தெரிந்து கொண்டீர்
உம் ஊழியத்திற்கென்றும் தெரிந்து கொண்டீர் – 2
ஆனால் உலகம் என்னை நெருக்குதே
இயேசுவே என்னை வெறுக்குதே
ஆனால் நீர் மாத்திரம்
என் வாழ்வில் இல்லையென்றால்
என்னால் என்ன செய்ய முடியும் ?
2. மனிதர்கள் மனம் மாறி இகழ்ந்திட்டாலும்
அதை நான் தாங்கிக் கொள்ளுவேன்
சூழ்நிலைகள் மாறி எதிர் நின்றாலும்
அதையும் நான் தாங்கிக் கொள்ளுவேன்
என் நேசரே நீர் விலகிச் சென்றால்
பாசம் தேடி நான் எங்கே போவேன்?
என் அன்பர் நீர்மாத்திரம் இல்லையென்றால்
என்னால் என்ன செய்ய முடியும்?