உம்மைப் போல நன்மைகள்
செய்யும் தேவன் இல்லையே
உம்மைத் தவிர யாரையும்
வாழ்வில் பாடமாட்டேனே
ஜீவன் தந்த தேவனே
ஜீவன் உள்ள நாளெல்லாம்
பாடுவேன் போற்றுவேன்
பாடி பாடி போற்றுவேன்
பாவம் எல்லாம் போக்கவே
பாதகன் போல்தொங்கீனீர்
பாவிஎன்னை மாற்றவே
பரிதாபமானீரே
சுவிஷேசம் சொல்லவே
சுத்த மனதை தாருங்க
சாத்தானை துரத்திட
சர்வாயுதம் தாருங்க
உமக்காக வாழ்ந்திட
உம் கிருபை தாருங்க
உம்சாயல் காட்டிட
உம்மைப் போல மாற்றுங்க