உம்மை மறந்து என்னால் வாழ முடியுமா?
உம்மை பிரிந்து என்னால் ஜீவிக்க முடியுமா?
இயேசையா சொல்லுங்கையா
இயேசையா அது முடியாதையா – 2
1. பாவங்கள் மன்னித;தீரே மறக்க முடியுமா?
பரிசுத்தம் தந்தீரே மறக்க முடியுமா?
மறக்க முடியுமா? மறக்க முடியுமா?
நீர் செய்த நன்மைகளை மறக்க முடியுமா?
2. வியாதிகள் நீக்கினீரே மறக்க முடியுமா?
விடுதலையாக்கினீரே மறக்க முடியுமா?
மறக்க முடியுமா? மறக்க முடியுமா?
நீர் செய்த நன்மைகளை மறக்க முடியுமா?
3. ஆபத்தில் காத்தீரே மறக்க முடியுமா?
அதிசயம் செய்தீரே மறக்க முடியுமா?
மறக்க முடியுமா? மறக்க முடியுமா?
நீர் செய்த நன்மைகளை மறக்க முடியுமா?
4. வேண்டுதல் கேட்டீரே மறக்க முடியுமா?
கேட்டதை தந்தீரே மறக்க முடியுமா?
மறக்க முடியுமா? மறக்க முடியுமா?
நீர் செய்த நன்மைகளை மறக்க முடியுமா?