உமக்கு ஏற்றவனாய் என்னை மாற்றிடுமே
உம்சித்தம் செய்திட கிருபை ஊற்றிடுமே
1. உம்மிடம் விசாரித்து
செயல்பட செய்யுமே
தேவனே என்தேவனே;
இயேசுவே என் இயேசுவே-2
2. விசுவாச வீரனாய்
வாடிநந்திட செய்யுமே
3. பகைவனை நேசிக்கும்
பக்குவம் தாருமே
4. ஊழியம் செய்திட
வாஞ்சையை தாருமே
5. ஆலயத்தின் மேலே
அக்கரை தாருமே
6. என்னோடு இருந்து நீர்
என்னை நடத்துமே
7. குடும்ப அன்பிலே நிலை
பெறச் செய்யுமே