உள்ளம் பொங்குதே
உந்தன் நேசம் நினைக்கையில்
எந்தன் தேவா இயேசு ராஜா
உந்தன் பாதம் ஓடி வந்தேன ஐயா
1. வாருமே அகம் தங்க
புகழ் சூடி போற்றிடுவேன்
எந்தன் துணைஎன்றென்றுமே நீரே
ஒருபோதும் கைவிடாத தேவா – உள்ளம்
2. தாகம் தீர்த்திடும் தேவா
வேகம் வாரும் என்னிடமே
பாரில் உம்மை நம்பி என்றும் வாழ்வேன்
உம்மைப் போல என்னை மாற்றும் தேவா – உள்ளம்
3. ஆத்துமா பெலன் அடைய
உந்தன் ஆவி ஈந்தீரே
உந்தன் சித்தம் என்றும் என்னில் விளங்க
நல்ல ஆவி நல்கி நடத்திடும் தேவா
4. மேகம் போல் திரள் சாட்சி
என்னை சூழ்ந்து நிற்குகையில்
வீரமுடன் ஓட்டமதை முடிப்பேன்
விசுவாசம் என்னில் துவக்கிடும் தேவா