உன்னத தேவனுக்கே
உன்னத தேவனுக்கே மகிமை
உலகில் சமாதானமாமே
காரிருள் நீங்கிடக் காசினி மீதிலே
கதிரொளியாய் ஜெனித்தார்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா துதியவர்க்கே
அல்லேலூயா துதியவர்க்கே
1. மானிடர் மேலிவர்க்கன்பிதுவோ
மனுக் கோலமாய் மனுவேலனார்
மாட்சிமை யாவையும் துறந்தே இவ்வுலகில்
மாணொளியாய் ஜெனித்தார்
2. தாரகையென அவர் தோன்றிடவே
நேர்ப் பாதையில் நடத்திடவே
தற்பரன் கிருபையும் சத்தியம் மீந்திட
தன் ஒளியாம் ஜெனித்தார்