ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே
ஜீவ நதியே என்னில் பொங்கி பொங்கி வா (2)
ஆசீர்வதியும் என் நேச கர்த்தரே (2)
ஆவியின் வரங்களாலே என்னை நிரப்பும் (2)
1. கன்மலையைப் பிளந்து வனாந்தரத்திலே
கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே 2
பள்ளத்தாக்கிலும் மலைகளிலும்
தண்ணீர் பாயும் தேசத்தை நீர்வாக்களித்தீரே-ஊற்று
2. ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தரே
ஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுவீர் 2
கனி தந்திட நான் செழித் தோங்கிட
கர்த்தரின் கரத்தில் நித்தம் கனம் பெற்றிட -ஊற்று
3. இரட்சிப்பின் ஊற்றுகள் எந்தன் சபை நடுவே
எழும்பிட இந்த வேளை இறங்கிடுமே 2
ஆத்ம பாரமும் பரிசுத்தமும்
ஆவலுடன் பெற்றிடவே வரம் தாருமே -ஊற்று
4. திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலே
இரட்சகரின் காயங்களில் வெளிப்படுதே 2
பாவக்கறைகள் முற்றும் நீங்கிட
பரிசுத்தர் சமுகத்தில் ஜெயம் பெற்றிட -ஊற்று
5. கிருபையின் ஊற்றுகள் பெருகிடவே
புதுபெலனடைந்து நான் மகிழ்ந்திடவே 2
பரிசுத்தத்தை பயத்துடனே
பூரணமாக்கிட தேவ பெலன் தாருமே -ஊற்று