காருண்மே காருண்யமே என் வாழ்வின் கேடகமே
ஆராதனை ஆராதனை ஆயுள் முழுவதுமே
இன்னும் உம்மை நேசிப்பேன் இயேசுவே-3
இன்னும் உம்மை நேசிப்பேன் இயேசுவே-
உமது பார்வையிலே எனக்கு
தயை கிடைத்தால் போதுமய்யா-2
தடைகள் எல்லாம் படிகளாகும்
மலைகள் எல்லாம் வழிகளாகும்-2
மனதுருகும் தெய்வம் நீரே
மன்னிப்பதில் தயை பெருத்தவரே
மனந்திரும்பி வருகின்ற வேளை
அள்ளி அணைக்கும் அன்பரே
உம்மீது படரும் கொடி நானே
ஆயள் முழுதும் நிதை;திருப்பேனே
உம்மாலன்றி தனியே என்னால்
ஒன்றும் செய்ய முடியாதே
வலது கரத்தால் தாங்குகின்றீர்
இடது கரத்தால் தழுவுகின்றீர்
உள்ளங்கையில் பொறித்து உள்ளீர்
எவரும் பறித்திட முடியாதே