நன்றியால் பாடிடுவோம்
நல்லவர் இயேசு நல்கிய எல்லா
நன்மைகளை நினைத்தே
செங்கடல்தனை நடுவாய்
பிரித்த எங்கள் தேவனின் கரமே
தாங்கியதே இந்நாள் வரையும்
தயவாய் மாதயவாய்
உயிர்ப்பித்தே உயர்த்தினார்
உன்னதம் வரை உடன் சுதந்திரராய்
இருக்க கிருபையின் மகாதானமது
வருங்காலங்களில் விளங்க
ஜீவனைத் தியாகமாய் வைத்த
பலர் கடும் சேவையில் மரித்தார்
சேர்ந்து வந்து சேவை புரிந்து
சோர்ந்திடாது நிற்போம்
மித்ருக்களான பலர் நன்றியிழந்தே
சத்துருக்களாயினரே சத்தியத்தைச் சார்ந்து
தேவ சித்தம் செய்திடுவோம்