தேவா நான் எதினால் விசேஷித்தவள்
இராஜா நான் அதை தினம் யோசிப்பவள் (2)
எதினால் இது எதினால்
நீர் என்னோடு வருவதினால் (2)
மேகஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது
பாதை காட்ட பகலெல்லாம் கூட செல்லுது
அன்பான தேவன் என்னோடு வருவார்
அது போதும் என் வாழ்விலே – தேவா
தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குது
ஆவல் கொண்ட கன்மலையும் கூட வருது
என் ஏக்கம் எல்லாம் என் தேவன் தீர்ப்பார்
சந்தோஷம் நான் காணுவேன – தேவா
வாழ்க்கையிலே கசப்புக்கள் கலந்திட்டாலும்
பாசமுள்ள ஒரு மரம் கூட வருது
மாராவின் நீரை தேனாக மாற்றம்
என் நேசர் என்னோடுண்டு – தேவா