தேனிலும் இனிமையே இயேசுவின் நாமமே
தெளி தேனிலும் மதுரமே
அதற்கிணையில்லை உலகிலே
கூனரை நிமிரச் செய்யும் குருடரை பார்க்கச்செய்யும்
கேளாத செவிடரை கேட்கச் செய்யும் -2
ஆ…ஆ…ஆ… (ஆமென்… அல்லேலூயா)
மாறாத நல் நாமம் இயேசுவின் நாமம்
காணக்கிடைக்காத தங்கம்
அவர் வெண்மையும் சிவப்புமான தேவன்
தலைத்தங்க மயமான தேவன் -2
ஆ…ஆ…ஆ… (ஆமென்… அல்லேலூயா)
இந்த தரணியில் இணையில்லா இயேசுவின் நாமம்
ஆகாரம் தரும் அதிமதுரம்
உன் சரும வியாதிகளை தீர்க்கும் நல் உதிரம்
கலங்கிய உள்ளங்களைத் தேற்றும் -2
ஆ…ஆ…ஆ… (ஆமென்… அல்லேலூயா)
ஜீவ கானானாம் பரலோகம் கொண்டு நம்மை சேர்க்கும்.