ஆராதிக்கும் லேவியரே கர்த்தரைத் துதியுங்கள்!
ஆரோன் வீட்டார் அனைவருமே கர்த்தரைத் துதியுங்கள்!
அவர் என்றும் நல்லவர்! அவர் எங்கள் இரட்சகர்!
அவர் கிருபை நித்தியம்! அவர் உண்மை நிரந்தரம்!
புகழ்ந்தவரில் நிர்மலம்! காண்போமே யுகயுகம்!
நித்தியர் என்னும் நாமம் கொண்ட கர்த்தரைத் துதியுங்கள்!
நிகரில்லா தம் மகிமை விளங்கும் கர்த்தரைத் துதியுங்கள்!
விண்ணிலும் மண்ணிலும் விருப்பங்கள் புரியும் கர்த்தரைத் துதியுங்கள்!
ஆழியின் ஆழத்தில் விந்தைகள் செய்யும் கர்த்தரைத் துதியுங்கள்!
மீட்கப்பட்டோர் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்!
மீட்பின் பணியில் இணைந்தவரெல்லாம் கர்த்தரைத் துதியுங்கள்!
தாழ்வில் நினைத்த தேவன் அவரை மலர்ந்து துதியுங்கள்!
தலைமுறைதோறும் மகிமை விளங்கும் கர்த்தரைத் துதியுங்கள்!