ஆயிரம் ஸதோத்திரமே
இயேசுவே பாத்திரரே
பள்ளத்தாக்கிலே அவர் லீலி
சாரோனிலே ஓர் ரோஜா – 2
1. வாலிப நாட்களிலே என்னைப்
படைத்தவரை நினைத்தேன் – 2
ஏற்றிய தீபத்தால் இதயமே நிறைந்தது
இயேசுவின் அன்பினாலே – (ஆயிரம்)
2. உலக மேன்மையாவும் நஷ்டமாய் எண்ணிடுவேன் – 2
சிலுவை சுமப்பதே லாபமாய் நினைத்து
சாத்தானை முறியடிப்பேன் – (ஆயிரம்)
3. இயேசுவின் நாமத்தினால் ஜெயங்கொடுக்கும் தேவனுக்கு 2
அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசுவே வாரும்
என்றென்றும் உம்மில் வாழ – (ஆயிரம்)