ஆவியானவரே தூய ஆவியானவரே
ஆட்கொண்ட ஆவியானவரே
வழி நடத்தும் துணையாளரே – எம்மை (2)
1. வழி காட்டும் தெய்வமே
ஒளி வீசும் தீபமே
காக்கும் பரிசுத்தமே
தேற்றும் துணையாளரே
ஆவியானவரே தூய ஆவியானவரே
லா…….லா…….
2. பலப்படுத்தி காப்பவரே
பயன்படுத்தும் பரிசுத்தரே
அக்கினியின் உருவமே
அபிஷேக தெய்வமே
ஆவியானவரே தூய ஆவியானவரே
லா…….லா…….
3. அகிலமெங்கும் இருப்பவரே
ஆலோசனை தருபவரே
கனி கொடுக்க செய்பவரே
காத்து வழி நடத்துபவரே
ஆவியானவரே தூய ஆவியானவரே