ஆண்டவரே யாரிடத்தில் போவேன்… – 2
நித்திய ஜீவ வசனம் எல்லாம்
உம்மிடத்தில் இருக்கும் போது
ஆண்டவரே யாரிடத்தில் போவேன்… – 2
வானத்தில் இருந்து ப+மிக்கு வந்த
ஜீவ அப்பம் நீரே… – 2
வார்த்தையை அனுப்பி வாதைகள் போக்கு
மகத்துவ தெய்வமும் நீரே… – 2 (ஆண்டவரே…)
கர்ப்பத்தின் பிள்ளையை தாய் மறந்தாலும்
என்னை நீர் மறப்பதில்லை… – 2
கண்ணின் மணிபோல் என்றுமே காப்பீர்
கருணையால் தேற்றிடுவீர்… – (ஆண்டவரே…)
உமது மாமிசமும்! உமது இரத்தமும்!
பானமாய் பண்ணும் போது… – 2
நித்திய ஜீவனை எனக்குத் தந்து
உம் பக்கம் சேர்த்துக்கொள்வீர்… – 2 (ஆண்டவரே…)