ஆலோசனை கர்த்தரே, அன்பான என் தெய்வமே… – 2
என் யோசனை வீணானது, நீர் யோசனை தாருமே… – 2
ஆலோசனை கர்த்தரே அன்பான என் தெய்வமே
என் யோசனைகளினால்
ஏமாற்றும் துன்பம் கண்டேன்… – 2
நீர் கூறும் யோசனை நலமானது!
சமாதானம் சந்தோஷமே… – 2 (ஆலோசனைக்…)
நான் நடந்த பாதையெல்லாம்
மாயையும் மதிகேடுமே… – 2
நீர்காட்டும் பாதை ஒளியானது!
ஜீவனின் வழியானது… – 2 (ஆலோசனைக்…)
என் வாயின் வார்த்தையெல்லாம்,
கசப்பான நீர் ஊற்று… – 2
நீர் சொன்ன வார்த்தை இனிதானது!
என்னை எப்போதும் வளமாக்குது… – 2 (ஆலோசனைக்…)