ஆசீர்வாதம் பெறவேண்டியே
உம்மிடம் வந்தேன் என் இயேசுவே
ஆசீர்வதியுமையா அடியேன் என்னையுமே… – 2 (ஆசீர்வாதம்பெற…)
என்மீது உம்கரம் வைத்து
என்னை நீர் ஆசீர்வதித்து… – 2
எல்லைகளை பெரிதாக்குமே – என்
எல்லைகளை விரிவாக்குமே… – 2 (ஆசீர்வாதம்பெற…)
வாலாக்காமல் தலையாக்குவேன்
கீழாகாமல் மேலாகுவாய்
என்றுரைத்த தெய்வமே
உம் சித்தம் என்னில் செய்யுமே… – 2 (ஆசீர்வாதம்பெற…)
நன்மையான எந்தஈவும்
பூரணமான எந்த வரமும்… – 2
பரத்தில் இருந்து உண்டாகியே
சோதிகளின் பிதா உம்மிடம் இருந்து வருகிறது…2 (ஆசீர்வாதம்பெற…)