ஆண்டவரே இயேசுவே
அண்டிவந்தேன் உம்மையே
அடைக்கலம் நீர் தானையா
ஆறுதலும் நீர் தானையா… – 2
நீர் எனக்கு அடைக்கலமாய் இருப்பதனாலே
இக்கட்டுக்கு விலக்கி என்னை காத்துக்கொள்வீர்… – 2
இரட்சண்யப் பாடல்கள் என்னை சூழ வைத்தவரே… – 2
என்றும் உம்மை பாடி துதிப்பேன் (ஆண்டவரே இயேசுவே…)
நீர் எனக்கு போதகராய் இருப்பதனாலே
நான் நடக்கும் வழியை எனக்கு காட்டுவீர்… – 2
என்மீது உந்தன் கண்ணை என்றுமே நீர் வைத்து… – 2
ஆலோசனை சொல்லுவீர் (ஆண்டவரே இயேசுவே…)
வலதுபுறம் இடதுபுறம் சாய்ந்து நான் போவதனாலே
வழியிதுவே இதிலே நடவென்று சொல்லுவீர்… – 2
உமது இனிய குரலைக் கேட்டு எனதுசெவியைசாய்த்துக்கொண்டு
உமது வழியில் நடப்பேனையா (ஆண்டவரே இயேசுவே…)